சோலார் பேனல் ஊழல்: சி.டி. எடுப்பதாக கோவையில் ஊரை கூட்டிய பிஜு ராதாகிருஷ்ணன்
கோவை: சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதான பிஜு ராதாகிருஷ்ணன் சில முக்கிய சி.டி.க்களை எடுத்துக் கொடுப்பதாகக் கூறி கோவை வந்தார். அதன் பிறகு என்னவென்றால் கோவையில் இல்லை வெளிநாட்டில் சி.டி.க்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் தொழில் அதிபர் சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன். சோலார் பேனல் ஊழல் குறித்து விசாரணை நடத்தும் ஆணையம் முன்பு பிஜு நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவர் கூறுகையில்,
சோலார் பேனல் ஊழலுக்கும் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் சி.டி.க்கள் என்னிடம் உள்ளது. 10 மணிநேரம் அவகாசம் அளித்தால் சி.டி.க்களை எடுத்துக் கொடுக்கிறேன் என்றார்.
இதையடுத்து கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பிஜுவை காரில் கோவைக்கு அழைத்து வந்தனர். அவர் காருக்கு பின்னால் கேமராக்களுடன் பல கார்கள் வந்தன. கோவையில் உள்ள செல்வி என்பவரின் வீட்டிற்கு சென்ற பிஜு ஒரு மஞ்சள் பையை அங்கிருந்து எடுத்தார். அதில் சில சிம்கார்டுகள் மற்றும் பேப்பர்கள் தான் இருந்ததே தவிர சி.டி. எதுவும் இல்லை.
உடனே அவர் சில சக்திவாய்ந்த மனிதர்கள் சி.டி.க்களை எடுத்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் சி.டி.க்கள் வெளிநாட்டில் இருப்பதாக கூறியுள்ளார். பிஜு மற்றும் அவருடன் வந்த கார்களால் செல்வி வீட்டிற்கு முன்பு கூட்டம் கூடிவிட்டது.
பிஜுவிடம் எந்த சி.டி.யும் இல்லை என்று சரிதா நாயர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications