நான் சசிகலா புஷ்பாவுக்கு கேக் ஊட்டி விட்டு 3 வருஷமாச்சு.. பிலால் விளக்கம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சசிகலா புஷ்பாவை தாம் திருமணம் செய்ததாக வெளியான செய்திகள் தவறு என்றும் அவருடன் பேசியே ஓராண்டாகிவிட்டது என்றும் அதிமுக தலைமை நிலையத்தில் பணிபுரிந்து வந்து முன்னாள் ஊழியர் பிலால் விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா புஷ்பா விவகாரத்தில் பிலால் என்ற அதிமுக தலைமை நிலைய முன்னாள் ஊழியர் பெயரும் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. பிலாலுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியாகி இருந்தன.
சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்த பணிப்பெண்கள் பானுமதியும் ஜான்சிராணியும் பிலால் குறித்து நிறையவே தகவல்களைத் தெரிவித்திருந்தனர். சசிகலா புஷ்பாவும் பிலாலும் திருமணம் செய்து கொண்டதாகவும் இதை தட்டிக் கேட்ட கணவர் லிங்கேஸ்வரனிடம், நான் அப்படித்தான் இருப்பேன் என சசிகலா புஷ்பா மிரட்டியதாகவும் கூறியிருந்தனர்.

கட்சி ரீதியாக பழக்கம்...
இந்த நிலையில் ஜூனியர் விகடன் இதழுக்கு பிலால் நடந்தது என்ன என்பது தொடர்பாக விளக்கமான பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சசிகலா புஷ்பா அறிமுகம் ஆனது சில ஆண்டுகளுக்கு முன்புதான். இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாநில துணைச் செயலாளராக அவர் பதவிக்கு வந்தபோது, ஒரு நாள் என்னிடம் வந்து புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வேண்டும் என்று பணம் கட்டினார்.

கணவர் அறிமுகம்...
நானும் உறுப்பினர் அட்டைகளைக் கொடுத்தேன். அதன் பிறகு, கட்சி அலுவலகம் வரும்போதெல்லாம் என்னிடம் வந்து பேசுவார். அந்தப் பழக்கத்தில் அவரது கணவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

உதவிகள் கேட்டிருக்கிறார்...
தூத்துக்குடி மேயர் ஆனதும் சென்னை வரும்போது மட்டும் பேசுவார். கட்சி தொடர்பாக உதவிகள் தேவைப் பட்டால் கேட்பார். செய்து கொடுப்பேன். இதில் என்ன தவறு?

ஒரு பெண்ணுக்கு உதவியது தவறா?
நான் ஆயிரம் ஆண்களுக்கு உதவிகள் செய்துள்ளேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு நட்பு ரீதியாக உதவி செய்ததை வைத்து இன்று என்னை இவ்வளவு கேவலப்படுத்துகின்றனர். அவர் குடும்பத்துக்கு நான் நன்றாக அறிமுகம் ஆனவன். அனைவரும் என்னிடம் நன்றாகப் பேசுவார்கள். அவர் வீட்டுக்கு அடிக்கடி போவேன். என்மீது அவர் குடும்பத்தினர் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். எனக்குத் திருமணமாகி, குடும்பம் உள்ளது. அவருக்கும் குடும்பம் உள்ளது.

கேக் ஊட்டும் படத்தில் எடிட்டிங்
கேக் ஊட்டும் போட்டோ எடுத்தது 3 ஆண்டுகளுக்கு முன்புதான். அவருடைய பிறந்த நாள் அன்று என்னை அழைத்து இருந்தார். நான் காலையில் போகமுடியாமல், அலுவலக வேலை முடித்து இரவுதான் அவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டுக்குப் போனநேரத்தில் அவரது குடும்பத்தினர் அனைவருமே வீட்டில் இருந்தார்கள், நான் வந்தவுடன், எனக்கு அவர் கேக் ஊட்டினார். அப்போது அவருடைய கணவர், அவரது அம்மா எல்லோரும் பக்கத்தில்தான் இருந்தார்கள். ஆனால் இப்போது வெளியாகியுள்ள போட்டோவில் பக்கத்தில் நின்ற அனைவரையும் கட் செய்துவிட் டார்கள். அப்படி கட் செய்து போட்டோவை வெளியிடவேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு வருஷமாகிவிட்டது பேசி...
நான் அவருடன் பேசியே ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் எம்.பி ஆனதற்குப் பின்னால் அவருடன் நான் பேசவே இல்லை. சந்திக்கவும் இல்லை. ஆனால் திடீரென்று இப்போது அவருடன் என்னைச் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள்.

யாரோ இயக்குகிறார்கள்...
சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்த அந்த 2 பெண்களையும் யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். யாரோ சொல்லிக் கொடுத்துத்தான் அந்தப் பிள்ளைகள் பேசுகிறார்கள். என் குடும்பத்திலேயும் எனக்குப் பிரச்னை. நான் வெளியே தலைகாட்ட முடியாமல் வேதனையில் இருக்கிறேன்.

திருமணம் செய்யவில்லை...
சசிகலா புஷ்பாவைக் கல்யாணம் செய்துகொண்டேன் என்று சொல்வது உண்மை அல்ல. நிர்வாகிக்கும், கட்சி ஊழியனுக்கும் இடையே என்ன பழக்கம் இருக்குமோ அதுதான் எனக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் இடையே இருந்தது. என்னைப் பற்றி அம்மாவுக்குத் தெரியும். சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடைபெற்ற அன்று நான் சென்னையிலேயே இல்லை. அப்புறம் எப்படி என்னிடம் அம்மா விசாரித்திருக்க முடியும்? வேலையைவிட்டு நின்ற பின், நான் அம்மாவைச் சந்திக்கவே இல்லை.
இவ்வாறு பிலால் விளக்கம் அளித்துள்ளார்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் -
பச்சைக் கொடி காட்டிட்டாரா விஜய்? பவன் கல்யாண் சொன்ன "நீங்க பாதி.. ஆனாலும் யாருமே எதிர்பாராத சிக்கல் -
Jayalalitha: "அஇபுதமமுக"! ஆமா, ஜெயலலிதாவின் பெயரை சசிகலா தவிர்த்தது ஏன்? இந்த 5 காரணங்கள்தானா? -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications