சென்னையில் பினராயி விஜயன்... சிறுவாணி அணை பிரச்சினை பற்றி பேச மறுப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சிறுவாணியில் புதிய அணை கட்டும் விவகாரம் குறித்துப் பேச மறுத்துவிட்டார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று சென்னை வந்திருந்தார். அப்போது விமான நிலையத்தில், கோவை பகுதி மக்களை, விவசாயத்தை பாதிக்கும் வகையில் சிறுவாணியில் அணை கட்டும் கேரள அரசின் முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தான் இப்போது வேறு வேலையாக வந்திருப்பால், இது குறித்த கேள்விக்கு பிறகு பதில் அளிப்பதாக கூறிவிட்டார் பினராயி விஜயன். செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியை எழுப்பியபோது பேசாமல் கடந்து சென்றார்.
இதற்கிடையில் சிறுவாணியில் அணை கட்டும் பணிகளை நேற்று கேரளம் ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications