பாஜக பிரமுகர் மீது தாக்குதல்- வாணியம்பாடியில் முழு கடையடைப்பு போராட்டம்!!
வாணியம்பாடி: வாணியம்பாடியில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், அறநிலையப்பிரிவு துணைத் தலைவருமான சிவப்பிரகாசம். நேற்று காலை வாணியம்பாடியில் உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பியோடியது.

இந்த தாக்குதலில் சிவப்பிரகாசத்தின் தலை, கால் ஆகியவற்றில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை அங்கிருந்த சிலர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தகவல் இந்துத்துவா அமைப்புகளுக்கு தெரியவர அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் பாஜக அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா உடனடியாக வாணியம்பாடி சென்றார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவப்பிரகாசத்தை சந்தித்து ஆறுதல் கூறி நடந்ததை கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளால் தொடர்ந்து இந்துத்துவா தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள் என சாடினார்.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி வாணியம்பாடி நகரில் இன்று ஒருநாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதனால் சி.எல்.ரோடு, கச்சேரி ரோடு, பஸ் நிலையம், பூக்கடை பஜார், முகம்மது அலி பஜார் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஆம்பூரில் பஜார் பகுதி, மார்க்கெட், பஸ் நிலையம் என அனைத்து இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்கின. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications