தர்மபுரி குழந்தைகள் பலி: அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய தமிழிசை வலியுறுத்தல்
சென்னை: தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களில் 13 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் இறந்த சம்பவத்தை சாதாரணமாக நினைத்து விட முடியாது.
இது இயற்கையான மரணம். நான் ஒரு மருத்துவர், அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டிய மருத்துவ வசதிகள் என்னவென்பது எனக்கு தெரியும்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில், அடிப்படை வசதிகள் இல்லாததுதான் குழந்தைகள் இறப்பிற்கு காரணம். மருத்துவமனையில் 400 பணியிடங்கள் கூட காலியாக இருந்தது என்றும் கூறுகிறார்கள்.
எனவே, பச்சிளங்குழந்தைகள் வார்டில் எத்தனை டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றினார்கள். என்னென்ன வசதிகள் இருந்தது என்பதை அரசு விளக்க வேண்டும். குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வசதி இருக்கிறதா? என்பது குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான் அது வெளிப்படையான விசாரணையாக இருக்கும்" இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!










Click it and Unblock the Notifications