பாஜக செல்வாக்கு சரிவதையே இடைத் தேர்தல் காங். வெற்றிகாட்டுகிறது- ஞானதேசிகன்
சென்னை: வடமாநில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியினால் பாஜக செல்வாக்கு சரிந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார், கர்நாடகம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் 11 இடங்களில் காங்கிரஸ் வெற்றி இலக்கை எட்டியுள்ளது. மேலும் சில இடங்களில் பாஜகவும் இதர கட்சிகளும் முன்னிலையில் இருக்கின்றன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவு மிகப்பெரிய சரிவை தந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 4 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதி என்பது வேறு. ஆட்சி செய்வது என்பது வேறு என்பதை பாஜக இப்போது உணர்ந்திருக்கும்.
கடந்த தேர்தலில் மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினார்கள். அதில் சிறிதளவாவது நிறைவேற்றாவிட்டால் வரும் காலத்தில் மிகப்பெரிய சரிவை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று அவர் கூறினார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications