பிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்
மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசிய அமீர், தனியரசு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை புகார் அளித்துள்ளனர்.
Recommended Video

கோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை ஆணையரிடம் கோவை மாவட்ட பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் இன்று கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில், நேற்று மாலை கோவையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது.

அதில் பேசிய இயக்குநர் அமீர், இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசினார். இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில், அதை குலைக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.
அதேபோல, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு பேசுகையில் தீவிரவாதத்தை ஆதரித்தும், பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
பிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார் pic.twitter.com/444siZvkTL
— Oneindia Tamil (@thatsTamil) June 9, 2018
எனவே தமிழகத்தில் மதக்கலவரம், பிரிவினைவாதத்தை ஆதரித்து பேசி கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications