ஜெ. வழக்கில் அப்பீல்: சு.சாமி பேச்சுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.. டாக்டர் தமிழிசை
நாகர்கோவில்: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்யாவிட்டால் நான் செய்வேன் என்று சுப்பிரமணியம் சாமி கூறியிருப்பது பாஜகவின் கருத்து அல்ல, அது சாமியின் சொந்தக் கருத்து என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
நாகர்கோவில் வந்த தமிழிசை அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலைக்கும், பாஜக.கவுக்கும் தொடர்பு இருப்பதாக பலரும் யூகிக்கிறார்கள். பாஜக ஊழல் இல்லாத இயக்கம். வழக்கில் தலையிடும் பழக்கம் எங்களுக்கு இல்லை. இந்த தீர்ப்பு எதிர்பாராத தீர்ப்பு என்பது அனைவரும் அறிந்ததுதான். ஏதாவது ஒரு தண்டனையோ அல்லது கண்டனமோ இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் எதிர்பாராத தீர்ப்பாக அமைந்து விட்டது. ஆனாலும் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதனால்தான் நான் வாழ்த்து சொன்னேன். பிரதமர் நரேந்திரமோடியும் வாழ்த்து சொன்னார். இதுதான் அரசியல் நாகரீகம்.

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். விடுதலை ஆனதால் அவருக்கு நிம்மதி கிடைத்துள்ளது. நான் ஏற்கனவே கூறியதுபோல, அந்த நிம்மதி தமிழக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். தமிழகம் ஊழல் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும்.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், தான் மேல்முறையீடு செய்யப்போவதாக சுப்பிரமணியசாமி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. இதுவரை 40 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் 3 மாதங்கள் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்த உள்ளோம்.
சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை அந்தத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. கூட்டணியில் தற்போதுள்ள சில கட்சிகள் வெளியே போகலாம், சில கட்சிகள் உள்ளே வரலாம். தேர்தல் நேரத்தில் தேசிய தலைமையுடன் இணைந்து அதை தீர்மானித்து முடிவு செய்வோம் என்றார் தமிழிசை.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications