குதிரையோ, கழுதையோ.. சவாரி செய்ய யாராவது ஒருத்தர் இருந்தா போதும்.. இது பாஜக திட்டம்!
தமிழகத்தில் ஆட்சி செய்ய தனக்கு ஆதரவான யாராவது இருந்தால் போதும் என பாஜக எண்ணி வருகிறது.
சென்னை: தமிழகத்தில் அதிமுக அரசே நீடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுவரை தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கூறியவர்கள் தற்போது அதிமுக அரசு மீது கரிசனம் காட்டுவது எதற்கு ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இதுதான் சமயம் எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விடவேண்டும் என பாஜக முயன்று வருகிறது. மத்தியில் ஆளும் கட்சி என்பதால் பாஜகவுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வருகிறது.
ஆரம்பத்தில் அப்போதைய முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக இருந்து பாஜக அரசு காய்நகர்த்தி வந்தது. இதையடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் மற்றும் பிளவுகளை தொடர்ந்து தற்போது எடப்பாடி அரசுடனும் இணக்கம் காட்டி வருகிறது.

மாநில அரசுகளை கட்டுப்படுத்தி..
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுக்கு பாஜக தான் காரணம் என கூறப்பட்டது. மேலும் தனக்கு எதிராக செயல்படும் மாநில அரசுகளை வருமான வரித்துறை, சிபிஐ என ரெய்டுகளை அவிழ்த்துவிட்டு ஒரு கலவரத்துடனேயே கட்டுப்படுத்தி வருகிறது.

முன்கூட்டியே கணிக்கும்..
தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் காலூன்றும் என்றும், விரைவில் தேர்தல் வரும் என்றும் கூறுவதை அக்கட்சி நிர்வாகிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அக்கட்சியின் நிர்வாகிகள் முன்கூட்டியே கணித்த பல விஷயங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

மத்திய அரசு மீது கோபம்
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மாட்டுக்கறி தடை உள்ளிட்ட விவகாரங்கள் மத்திய அரசு மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உள்ளவர்கள் மீது சவாரி
இதனால் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஏற்கனவே உள்ளவர்கள் மீது சவாரி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதா பாஜக? தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும், காலூன்றும் என்று கூறியவர்கள் திடீரென அதிமுக அரசே நீடிக்க வேண்டும் என்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications