நம்ம மேட்டருக்கு வருவோமா... 8 தொகுதிகள் குறித்த ஆலோசனையில் குதித்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக, பாமக என்று மாறி மாறி அல்லாடிக் கொண்டிருந்த பாஜக நேற்று முதல் முறையாக தான் போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது.

பாஜக கூட்டணியில் இந்த நிமிடம் வரை முழுமையான தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை. எல்லாம் அரைகுறையாகவே உள்ளது.

இந்தக் கூத்து காரணமாக தான் போட்டியிடும் தொகுதிகள், அதன் வேட்பாளர்கள், வெற்றி வாய்ப்பு, பிரசார உத்திகள் குறித்து உட்கார்ந்து ஆலோசிக்கக் கூட முடியாத நிலைக்கு பாஜக தலைவர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.

மாறி மாறி பாமக, தேமுதிக தலைவர்களுடன் பேசுவதிலேயே அவர்களுக்கு இத்தனை நாட்களும் போய் விட்டது. நேற்றுதான் சற்று ஆற அமர உட்கார்ந்து பேசியுள்ளனர்.

இப்போதைக்கு எட்டு தொகுதிகள்

இப்போதைக்கு எட்டு தொகுதிகள்

பாஜக கூட்டணியில் பாஜக 8 தொகுதிகளில் போட்டியிடுவதாக தற்போதைக்கு முடிவாகியுள்ளது. பாமக கூட்டணியை விட்டு விலகினால் இந்த எண்ணிக்கை கூடலாம்.

எந்தெந்த தொகுதிகள்...

எந்தெந்த தொகுதிகள்...

தென் சென்னை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தஞ்சாவூர், ராமநா்தபுரம், சிவகங்கை, திருப்பூர், தென்காசி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை

மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை

இதையடுத்து இந்தத் தொகுதிகள் அடங்கிய மாவட்ட நிர்வாகிகளை நேற்று சென்னக்கு அழைத்திருந்தது பாஜக தலைமை. அவர்களுடன், கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

எப்படி செயல்படலாம்

எப்படி செயல்படலாம்

மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த்க கூட்டத்தில் பிற கட்சிகளின் வேட்பாளர்கள் யார், நமது செல்வாக்கு என்ன, தொகுதி நிலவரம் எப்படி உள்ளது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது கட்சித் தலைமை.

பிரசார உத்திகள்

பிரசார உத்திகள்

அதைத் தொடர்ந்து பிரசார உத்திகள். யாரெல்லாம் பிரசாரத்திற்கு வரவுள்ளனர். எப்படி பிரசாரம் செய்வது, கூட்டணியில் நீடிப்போருடன் இணக்கமாக செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட நிர்வாகிகளுக்கு பொன் ராதாகிருஷ்ணன் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+