பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சியல்ல.. ராஜேந்திர பாலாஜி பொளேர்!
பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சியல்ல என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சியல்ல என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது ஒன்றும் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என செய்தியாளர்கள கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி பாஜக நாட்டையே ஆள்கிறது. அது ஒன்றும் தீண்ட தகாத கட்சியில்லை. பாஜகவுக்கு ஆதரவு தருவதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்.

பழிவாங்கப்பட்டுள்ளார் சசி
மேலும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, சசிகலா பழிவாங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என கூறினார். சசிகலா விடுதலையாகிய மீண்டும் கட்சிப் பணியாற்றுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

தினகரனை ஒதுக்கவில்லை
ஒவ்வொருவரும் சசிகலாவால்தான் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும் தினகரனை கட்சியில் இருந்து யாரும் ஒதுக்கி வைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒதுக்கி வைக்க முடியாது
அவரை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.விரைவில் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து

அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
அமைச்சர்கள் சிலர் டிடிவி தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டதில் மாற்றமில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தினகரனை யாரும் ஒதுக்க முடியாது என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications