''மதுரை மல்லி..மதுரை மல்லி..மதுரை மல்லி''.... டென்ஷனில் பாஜக!!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடைசி வரை தெளிவாகச் சொல்லாமலேயே கட்சி மாநாட்டை முடித்து விட்டாரே விஜயகாந்த் என்று பாஜக தரப்பு கடும் டென்ஷனாக உள்ளதாம்.
உளுந்தூர்ப்பேட்டை, உளுந்தூர்ப்பேட்டை என்று கூறியே பலரையும் டென்ஷனாக்கி விட்டது தேமுதிக வட்டாரம். உளுந்தூர்ப்பேட்டையும் போய் விட்டது.. இனி அடுத்து என்ன சொலி டைம் பாஸ் செய்யப் போகிறது என்று தேமுதிகவைப் பா்த்து பலரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது.
காரணம், கூட்டணி குறித்து தெளிவான, புரியும்படியான ஒரு அறிவிப்பையும் விஜயகாந்த் அதில் சொல்லாமல் போனதால்.

எல்லோரையும் வெயிட் பண்ணச் சொல்லிட்டு
தன்னைத் தேடி கூட்டணிக்காக வந்த கட்சிகளிடமெல்லாம், இந்த மாதிரி நாங்க உளுந்தூர்ப்பேட்டையில மாநாடு வச்சிருக்கோம். அப்பதான் நாங்க எல்லா முடிவையும் எடுக்கப் போறோம். கண்டிப்பாக உங்களை மனசுல வச்சிருக்கோம்... முடிவெடுத்துச் சொல்றோம் என்று கூறி வந்தது தேமுதிக தரப்பு.

2 இலவு காத்த கிளிகள்...
இலவு காத்த கிளிகள் என்று சொல்வார்களே.. நம்ம வடிவேலு கூட தலைநகரம் படத்தில் சொல்லி அத்தனை பேரையும் தெறித்து ஓட வைப்பாரே... அந்தக் கதையைத்தான் தற்போது தன்னைத் தேடி வந்த கட்சிகளுக்கும் சொல்லி காதில் கொஞ்சம் பூவையும் சொருகி அனுப்பி வைத்துள்ளார்.

நானும் உந்தன் உறவை
திமுகவுக்கு இது கொஞ்சம் சோதனைக்காலம்தான். தேமுதிகவுக்காக காத்திருக்கும் நிலைக்கு அது தள்ளப்பட்டது நிச்சயம் சோதனைதான் அல்லவா.. .ஆனாலும் எவ்வளவு பொறுத்துப் போக முடியுமோ.. அவ்வளவுக்குப் பொறுத்துப் போய்க் கொண்டிருக்கிறது திமுக.

உன்னைத்தானே...!
மறுபக்கம் பாஜக.. மதில் மேல் பூனை கணக்காக திமுக பக்கம் தேமுதிக போய் விடாமல் கடுமையான கண்காணிப்பு மற்றும் நெருக்கடிகளை அக்கட்சிக்குக் கொடுத்து குடாய்ந்து கொண்டிருக்கிறது.

நான் உன்னை நினைச்சேன்.. நீ என்ன நினைச்சே...!
ஆனால் விஜயகாந்த் மனசுக்குள் இடம் பிடித்திருப்பது யார் என்பதை எந்த வசியத்தாலும் அறிய முடியாமல் இந்த இரண்டு கட்சிகளும் பட்ட பாடு, படும் வேதனை இருக்கிறதே.. சொல்லி மாள முடியாது.

''மதுரை மல்லி..மதுரை மல்லி..மதுரை மல்லி..''
மதுரை மல்லி மதுரை மல்லி மதுரை மல்லி என்று தம்பி ராமையா, வடிவேலுவிடம் ஒரு டுபாக்கூர் பூப்பந்தை தலையில் கட்டிச் செல்வாரே அப்படியாகி விட்டது தேமுதிகவின் உளுந்தூர்ப்பேட்டை மாநாடு.

எதுவுமே புரியலையே ...!
எல்லோரிடமும் மாநாட்டில் முடிவெடுத்துச் சொல்வேன், தொண்டர்களைக் கேட்டுச் சொல்வேன் என்று திட்டவட்டமாக, அடித்துச் சொல்லியிருந்தார் விஜயகாந்த். இதைத்தானே அத்தனை பேரும் நம்பியிருந்தார்கள்.. ஆனால் நடந்தது என்ன..

அவங்க சொல்றாங்க.. நானும் சொல்வேன்.. எல்லாத்தையும் கேக்கனும்!
தொண்டர்கள் கூட்டணி வேண்டாம் என்று கோஷம் போட.. பார்த்தீங்களா அவங்களே சொல்லிட்டாங்க என்று விஜயகாந்த்தும் ரிப்பீட் செய்ய.. ஆனால் அடுத்த விநாடியே, ஆனா தலைமையும் முடிவெடுக்கும். அதையும் நீங்க கேக்கனும் என்று சொல்லி.. ஆஹாஹாஹா... என்னா மாதிரியான முடிவு..

எரிமலை எப்படிப் பொறுக்கும்
விஜயகாந்த் கடைசி வரை தெளிவாகப் பேசாமல் பூடகமாகவே பேசிப் போன அந்தக் காட்சியை நினைத்து நினைத்து பாஜகவினர் டென்ஷனாகிக் கிடக்கிறார்களாம். எதையுமே அவர் சொல்லலையே என்பதுதான் அவர்களின் விசனமாக உள்ளது.

நீதியின் மறுபக்கம்!
இந்தக் கடுப்பில்தான் புதிய நீதிக் கட்சியை வலியக்கக் கூப்பிட்டு போட்டோ எடுத்து அனுப்பி வைத்துள்ளனர் என்கிறார்கள.

செளகார்பேட்டையிலிருந்து பொன்னார்...!
இந்த நிலையில் சென்னை செளகார்பேட்டையில் வசிக்கும் இந்தி, ராஜஸ்தானி உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களைக் கவரும் வகையிலான பாஜக ஆலோசனைக் கூட்ட்தில் பொன்னார் எனப்படும் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.. அவரிடம் விஜயகாந்த் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

எல்லாத்தையும் பேசிட்டோம்
அதற்கு அவர் பதிலளிக்கையில், தேமுதிகவைப் பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் பலமுறை அவர்களை சந்தித்து கூட்டணி அமைப்பது தொடர்பாக எல்லா விஷயங்களையும் பேசி இருக்கிறோம். அவர்கள் கட்சி மாநாட்டில் கூட்டணி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம்.

தீர்ப்பு உன் கையில்
இனி எங்கள் கூட்டணியில் இணைவது பற்றி விஜயகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும்.

நீ போடா.. போடா.. நீ வாடா.. வாடா..!
பாமகவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் அவர்கள் இணைவார்கள் என்று நம்புகிறோம். 2 நாளில் கூட்டணியை இறுதி செய்து விடுவோம். 8ம் தேதி நடக்கும் மோடி கூட்டத்தில் கூட்டணித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றார்.
முடியல...!
-
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications