பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.. பாமக- வும் இணையும்... இல.கணேசன்
மதுரை : பாஜக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க. அல்லாத மாற்று அணியை பா.ஜ.க. அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது இல.கணேசன் கூறியதாவது...

பா.ம.க. வினர் வேகமாகச் செயல்பட்டுவருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள் என காத்திருக்கிறோம். நிச்சயம் அவர்கள் பாஜக கூட்டணியிலே இடம் பெறுவார்கள்.
தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்சியின் தலைமை சம்மதிக்கும். ஆகவே தற்போது தொண்டர் கருத்தை கேட்டறிந்து வருகிறோம். தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மாற்று அணியை பா.ஜ.க. அமைக்கும்.
எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது பலத்தை கூடுதலாக்கும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நற்குணமிக்கவர். பக்குவமானவர். தேசியத்தை வலுப்படுத்த அவர் பாஜக கூட்டணியில் சேரவேண்டும் என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
பாஜகவினருக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தாய்வீடு போன்றது. குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என தாய் கவலைப்படுவதில் தவறில்லை. தி.மு.க.வில் குடும்பப் பிரச்னை எதிரொலிப்பது அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
இலங்கையில் உள்ள தமிழர்களிடம் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்களது நம்பிக்கையை நிச்சயம் பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.
இலங்கைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கூட்டமைப்பு சார்பில் அனுபவமிக்க சம்பந்தம் எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார். அவர் தமது கடமையை சிறப்பாக ஆற்றி தமிழர் உரிமைக்குப் பாடுபடுவார்.
இவ்வாறு இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறினார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications