For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்ததில் விதிமீறல்...சந்தேகம் எழுப்பும் தமிழிசை சவுந்திரராஜன்!

நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்ததில் விதிமீறல் இருப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    நடராஜனுக்கு காட்டிய அவசரத்தை ஏன் ஜெயலலிதாவுக்கு காட்டல? - தமிழிசை கேள்வி-வீடியோ

    திருச்சி : சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்ப மாற்று சிகிச்சையில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடராஜனுக்கு யார் உறுப்பு தானம் செய்தார்கள் என்று மருத்துவமனை தெளிவாக குறிப்பிடவில்லை.

    தஞ்சாவூரைச் சேர்ந்த மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் 74 வயது நபருக்கு பொருத்தப்பட்டதாக மருத்துவமனை கூறி இருந்தது. இதனால் இளைஞர் கார்த்திக்கின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நடராஜனுக்கு பொருத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமில்லாத செய்திகள் வெளிவந்தன.

     விதிகள் மீறல்

    விதிகள் மீறல்

    இந்நிலையில் நடராஜனுக்கு செய்த உறுப்பு மாற்று சிகிச்சையில் விதிமீறல்கள் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : நடராஜனுக்கு செய்த உறுப்பு மாற்று சிகிச்சையில் விதிகள் பல மீறப்பட்டுள்ளது, இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்.

     ஏழை குடும்பத்து இளைஞன்

    ஏழை குடும்பத்து இளைஞன்

    தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழைக்குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞர் எப்படி குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிதியுதவி செய்தது யார்.

     சட்டப்படி தவறு

    சட்டப்படி தவறு

    ஒரு நோயாளி மூளைச்சாவு அடைந்தால் அவரின் பெரும்பாலான உறுப்புகள் அவர் சிகிச்சை பெற்ற அந்த மருத்துவமனையில் உள்ள மற்றவர்கள் பெறவே அனுமதி உள்ளது. ஆனால் இரண்டாம் கட்ட ஆலோசனை பெற வந்த குளோபல் மருத்துவமனை எப்படி உறுப்புகளை பெற்றது.

     பல்வேறு சந்தேகங்கள்

    பல்வேறு சந்தேகங்கள்

    விதிகள் அப்படி இருக்க கார்த்திக்கின் பெரும்பாலான உறுப்புகள் எப்படி குளோபல் மருத்துவமனை நோயாளிகளுக்குக் கிடைத்தது என்பன உள்ளிட்ட பல சந்தேகங்கள் இதில் எழுகின்றன. எனவே இந்த உறுப்பு மாற்று சிகிச்சை குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழிசை கூறியுள்ளார்.

    English summary
    Tamilnadu BJP leader Tamilisai soundarrajan raising questions that organ transplanted to Natarajan has many violations and it is not clear how a poor man from Tanjore got treated at Global hospitals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X