அரசியல் கட்சிகளை கூட்டணிக்காக நட்பு ரீதியில் சந்தித்து வருகிறது பாஜக - தமிழிசை
சென்னை: தமிழகத்தில் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து அரசியல் கட்சி தலைவர்களை பாஜக நட்பு ரீதியில் சந்தித்து வருவதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆவடியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். தமிழகத்தின் பாஜகாவின் அடிப்படை கட்டமைப்பு உறுதிப்படுத்தும் வகையில் 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளை 6 ஆயிரம் பகுதிகளாக பிரித்து 600 நிர்வாகிகள் சுற்றுப்பயணம் செய்து வருவதாக கூறினார்.

கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நட்பு ரீதியில் நடைபெற்று வருவதாகவும் மேலிடத்தின் அறிவுறுத்தலின் படி அடுத்தக்கட்ட சந்திப்புகள் விரைவில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் இருந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் தமிழகம் வர உள்ளதாக தமிழிசை தெரிவித்தார். தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது என தெரிவித்த அவர் பாஜக சார்பில் விரைவில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கூறினார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications