ஆளுநரை மரியாதை நிமித்தமாகவே சு.சாமி சந்தித்தார்: ராஜ்பவன் விளக்கம்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக சசிகலா வரக்கூடாது என பெரும்பாலான மக்கள் கருத்து கூறி வரும் வேளையில் சசிகலாவுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டு வருகிறார். சசிகலாவை முதல்வராக பதவியேற்க வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதை விமர்சனம் செய்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

இதனிடையே தமிழக அரசியலிலும், தமிழக பிரச்சனைகளிலும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி தமிழர்களின் கண்டனங்களை அடிக்கடி பெற்று வரும் சுப்பிரமணியன் சுவாமி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் சுமார் 30 நிமிடங்களாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் பாஜக எம்.பி. ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியது மரியாதை நிமித்தமானது என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை










Click it and Unblock the Notifications