செங்கோல் முன் சாய்ந்த மோடி.. “மூச்சு இருக்கா?” என கேட்ட திமுக அமைச்சர்! ஒருமையில் திட்டிய நாராயணன்
சென்னை: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் செங்கோல் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்த பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர் மனோ தங்கராஜை பாஜகவின் நாராயணன் திருப்பதி கடுமையாக ஒருமையில் வசைபாடி இருக்கிறார். அப்படி என்ன பதிவை அவர் வெளியிட்டார்? விரிவாக பார்ப்போம்.
கடந்த 3 ஆண்டுகளாக டெல்லியில் பழைய நாடாளுமன்ற வளாகம் அருகே புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி நடைபெற்று வந்தது. 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற பணிகளுக்காகு அடிக்கல் நாட்டி வைத்தார். அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் வழங்கிய செங்கோலை பிரதமர் மோடி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் சபாநாயகர் இருக்கைக்கு அருகிலேயே வைத்தார். முன்னதால் மக்களவைக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வைக்கப்பட்டு இருந்த செங்கோல் முன் நெடுஞ்சான்கிடையாக மண்டியிட்டு மரியாதை செலுத்தினார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு விமர்சித்து இருந்தார். அதில், "மூச்சு இருக்கா? மானம் ?? ரோஷம் ???" என்று குறிப்பிட்டு அந்த படத்தை அமைச்சர் பதிவிட்டு இருந்தார்.

இதனை கண்ட பாஜகவினர் அமைச்சர் மனோ தங்கராஜை ஒருமையில் சாடி விமர்சித்து வருகிறார்கள். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "இறைவனை வணங்க இப்படி இருப்பதில் தவறில்லை. மானங்கெட்ட, முட்டாளே, உதவி கேட்க வந்தவர்களிடம் எப்படியோ இருக்க முயற்சித்ததாக செய்தி வந்தும் மானம், ரோஷம், வெட்கம், சூடு, சுரணை இல்லாமல் இன்னும் மூச்சு இருக்கிறதே? வெட்கங்கெட்ட.." என்று காட்டமாக பதிவிட்டு உள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில், "அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அந்த நபரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதோடு, கைது செய்து தகுந்த தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications