பார்ப்பன அடிவருடிகளாக.. வாலை ஆட்டி கொண்டிருப்பது திமுகதானே.. ஆர்.எஸ். பாரதியை விளாசிய பாஜக நாராயணன்
ஆர்.எஸ். பாரதிக்கு பாஜக நாராயணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: பார்ப்பனர்களை நாய்கள் என்று திட்டியிருக்கிறார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி. அதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாரயாணன் திருப்பதி காட்டமான பதிலைக் கொடுத்துள்ளார்.
பார்ப்பனர்களை அண்டி பிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் திமுகவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க வேண்டும் ? நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்? என்று திருப்பதி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது முகநூலில் அவர் போட்டுள்ள பதிவு:

நாய்களா
பார்ப்பனர்களை 'நாய்கள்' என்று பேசியிருக்கிறார் தி மு கவின் அமைப்பு செயலாளர் ஆர் . எஸ்.பாரதி. அவரின் கவனத்திற்கு....... 1967ம் ஆண்டு, பதவி சுகத்திற்காக, ஆட்சி அதிகாரத்திற்க்காக ஈ.வெ.ராவை எதிர்த்து ராஜாஜி என்ற பார்ப்பனரை துணைக்கு அழைத்து கூட்டணி ஏற்படுத்தி கொண்டு தான் வெற்றி பெற முடிந்தது திமுக வால் என்பதை மறந்து விட வேண்டாம்.

ராகுல் காந்தியுடன் சேர்ந்தீர்களே
1971ம் ஆண்டு 'காஷ்மீரத்து பாப்பாத்தி' என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராகாந்தி என்ற பார்ப்பனரோடு கூட்டணி அமைத்ததாலேயே கருணாநிதியின் தி மு க ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை மறந்து விட்டதா திமுக? 1989 ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் ஜானகி எம் ஜி ஆர் என்ற இரு பார்ப்பன சமுதாய பெண்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே, திமுக ஆட்சியை பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?

சோ என்ற பார்ப்பனர் இல்லாவிட்டால்
1996 ம் ஆண்டு 'சோ' என்ற பார்ப்பனரின் முயற்சியால் தான் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும், ரஜினியின் அறைகூவலும் கிடைக்க பெற்று திமுக வெற்றி பெற்றது என்பதை மறைக்க முடியுமா? 2006 ம் ஆண்டு நான் 'பூணூல் அணிந்த பார்ப்பனன்' என்று தன்னை அழைத்து கொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தான் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற 'மைனாரிட்டி ' ஆட்சியை திமுகவால் பிடிக்க முடிந்தது என்பதை மறுக்கவோ,மறைக்கவோ முடியுமா?

பார்ப்பனர் வாஜ்பாய் அரசில்
மேலும்,1999-ம் ஆண்டு வாஜ்பாய் என்ற பார்ப்பனரின் தலைமையில் தான் திமுக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது என்பதையும், 2004 மற்றும் 2009 ம் ஆண்டு காஷ்மீரத்து பாப்பாத்தி என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராவின் பேரன், பூணூல் அணிந்த பார்ப்பனர் என்று மார்தட்டிக்கொண்ட ராகுல் காந்தியின் பார்ப்பன காங்கிரஸ் கட்சியுடன் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அதிகாரம் செலுத்தி 2ஜி வரலாறு படைக்க முடிந்தது என்பதை மறந்து விட வேண்டாம்.

பதவி சுகத்திற்காக
பதவி சுகம் பெறுவதற்கு, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு துணையாய் இருந்த 'பார்ப்பனர்களை' நாய்கள் என்றுஅழைக்கிறீர்களே திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்களே, பார்ப்பனர்களை அண்டி பிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் திமுகவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க வேண்டும்? நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்?
தவறு செய்து விட்டீர்கள் ஆர்எஸ்.பாரதி அவர்களே, தவறு செய்து விட்டீர்கள்! என்று கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.
-
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications