காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி.. கடை கடையாக வசூலில் இறங்கிய அமைச்சர்!
திருச்செந்தூர்: ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக நிதி சேகரிக்கும் முயற்சியாக திருச்செந்தூரில் இன்று பாஜகவினர் நிதி வசூலில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் நிதி சேகரித்தனர்.
காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளையும்,உடமைகளையும்,உறவினர்கள் உள்ளிட்டோரை இழந்து அல்லல்படும் மக்களுக்கான நிவாரணத்திற்காக மக்கள் நிதியளிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொது மக்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. நிவாரண நிதி வசூலை மத்திய கனரக தொழிற் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சிறு சிறு கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் தானே நேரில் சென்று உண்டியல் ஏந்தி வசூல் செய்தார். பொதுமக்களிடமும் நிதி வசூல் செய்யப்பட்டது.
இந்த நிவாரண நிதி திரட்டலில் ஒன்றிய தலைவர் சிவ செந்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வராஜ், செந்தில்வேல், மாவட்ட வழக்கறிஞர் அணி பொதுச் செயலர் வக்கீல் கிரீஷ்குமார், ஒன்றிய துணைத் தலைவர் ஸ்ரீ கிருஷ்ணகுமார், நகரத் தலைவர் எஸ்.எஸ்.மணியன், ஒன்றிய செயலர் காளைச்சாமி, ஜனார்த்தனன், ராமேஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications