ரூ.45 லட்சத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில நிர்வாகி.. வலைவீசி தூக்கிய போலீசார்!
சென்னை : சென்னை கொரட்டூரில் ரூபாய் 45 லட்சத்தை பறித்துச் சென்று பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் பாஜக மாநில நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் நாராயணி. இவர் கடந்த 10ஆம் தேதி சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "கொரட்டூரில் உள்ள தனது பூர்வீக சொத்தான 78 சென்ட் நிலத்தை விற்பதற்காக எனது நண்பரான சதீஷ் மற்றும் தரகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரை அணுகினேன்.
தொடர்ந்து, சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்ததால், அதை தீர்த்து வைத்து இடத்தை விற்று கொடுப்பதற்காக கமிஷன் அடிப்படையில் பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்பவரை அணுகினேன்.

இந்நிலையில் வேறு ஒருவர் மூலம் ரூ.5 கோடிக்கு நிலம் விற்கப்பட்டதை தெரிந்து கொண்ட மின்ட் ரமேஷ், தனது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் என்பவருடன் வீட்டிற்கு வந்து என்னிடமிருந்த ரூபாய் 45 லட்சத்தை பறித்துச் சென்றார். மேலும் இது குறித்து போலீசாருக்கு புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என நாராயணி கோரியிருந்தார்.
அதேபோல் தரகர் பிரகாஷ்ராஜ் கடந்த 18ஆம் தேதி கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் மின்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் இருவரும் நேரில் வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.
இந்த 2 புகார்களின் பேரில், கொரட்டூர் போலீசார் தனித்தனியாக 2 வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேஷை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாஜக மாநில நிர்வாகி மின்ட் ரமேஷ், வட சென்னை பகுதியில் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது வட சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!











Click it and Unblock the Notifications