தமிழகத்தில் காலூன்ற பாஜக கையிலெடுக்கும் "பலவீன" அரசியல்'!
தமிழகத்தில் காலூன்ற கட்சிகளை பலவீனப்படுத்தும் அரசியலை கையிலெடுத்து வருகிறது பாஜக.
சென்னை: தமிழகத்தில் காலூன்றுவதற்காக கட்சிகளை பலவீனப்படுத்துகிற அரசியலை தொடர் யுக்தியாக பாஜக கையிலெடுத்து வருகிறது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் குறி வைத்து காய்கள் நகர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது பாஜக. அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் என்னதான் பாஜகவை குறை கூறினாலும் தினகரன் வெளிப்படையாக பாஜகவை எதிர்க்கவில்லை.
இந்த அரசியல் விளையாட்டுகளுடன் ஆள்பிடி விளையாட்டு, கட்சிகளை வழக்குகள் மூலம் மிரட்டுதல் என திரைமறைவு வேலைகளையும் கன கச்சிதமாக அடுத்தடுத்து பாஜக செய்து வருகிறது. பாமகவில் இருந்து விலக்கப்பட்ட வடமாவட்ட பிரமுகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வடதமிழக பிரமுகர்
வட தமிழகத்தில் சென்னையை ஒட்டிய அந்த மாவட்டத்தில் அந்த பிரமுகருக்கு நல்ல செல்வாக்கு. அமித்ஷா தமிழகம் வரும்போது அவர் சேருவதாக இருந்தது. தற்போது அது தள்ளி போயுள்ளது.

சிறுத்தை பிரமுகர்
இதேபோல் சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியே போன பெரிய பிரமுகரையும் வளைத்துள்ளது பாஜக. அவரிடம் சிறுத்தைகளின் பலம் என்ன? தொண்டர்களின் புழுக்கம் என்ன? என விரிவாக கேட்டிருக்கிறது.

வழக்குகள் வாபஸ் ஆனால்...
சிறுத்தைகள் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை ஆட்சியாளர்களிடம் பேசி திரும்பப் பெற தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் நீண்டகால மனப் புழுக்கம். இதை தமிழக அரசு சரி செய்து கொடுத்தால் இதை காரணம் காட்டியே ஏராளமான சிறுத்தைகளை வரவழைக்கலாம் என பெரிய பிரமுகர் ஐடியா கொடுத்திருக்கிறாராம்.

பலவீன அரசியல்
பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய பிக்பாஸும், இது பிரச்சனை இல்லை.. பார்த்து கொள்ளலாம்.. பேசிவிட்டு சொல்கிறேன். இப்படி கட்சிகளை பலவீனப்படுத்துகிற பாஜகவின் அரசியலாவது கை கொடுக்குமா? என்பது விரைவில் தெரிய வரும்.
-
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications