பாஜக உறுப்பினர் சேர்க்கை இன்னும் 1 மாத காலம் நீடிக்கும் – தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: பாஜக உறுப்பினர் சேர்க்கை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடந்தது. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட அமைப்பு செயலாளர்கள், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள், அணிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர், "தமிழகத்தில் இதுவரை 31 லட்சம் உறுப்பினர்கள் மிஸ்டுகால் மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் 60 லட்சம் பேர் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
கடந்த மாதம் 30 ஆம் தேதியுடன் உறுப்பினர் சேர்க்கை முடிவடைவதாக இருந்தது. பல மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று இந்த மாதம் இறுதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் பற்றி கூட்டத்தில் விவாதித்து முடிவெடுத்துள்ளோம். அதன்படி இந்த மாதம் உறுப்பினர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications