நாங்குநேரியில் நாங்கதான் போட்டியிடுவோம்.. அடம் பிடிக்கும் பாஜக- அதிர்ச்சியில் அதிமுக
Recommended Video
சென்னை: நாங்குநேரி சட்டசபை தொகுதியில் பாஜக போட்டியிட விரும்புவதால் அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

விருப்ப மனுக்கள் வாங்கும் திமுக
நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடுகின்றன. இத்தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை திமுக பெற்று வருகிறது.

இரண்டிலும் அதிமுக போட்டி
இதேபோல் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு அதிமுகவும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

நாங்குநேரியை கேட்கும் பாஜக
இந்நிலையில் நாங்குநேரியில் தாங்கள் போட்டியிட விரும்புவதாக அதிமுகவிடம் பாஜக கூறியிருக்கிறதாம். இதனால் அதிர்ந்து போயிருக்கிறதாம் அதிமுக தலைமை. 2 தொகுதிகளிலுமே போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களைப் பெற்று வரும் சூழலில் இப்படி ஒரு குண்டை பாஜக வீசுகிறதே என்பது அதிமுகவின் கவலை.

எதிர்ப்பாளர்களுக்கு ஷாக் வைத்தியம்
ஆனால் பாஜகவோ, நாங்குநேரியில் நயினார் நாகேந்திரன் அல்லது பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவரை நிறுத்தி வெற்ற பெற வைக்க வேண்டும்; தமிழக சட்டசபைக்குள் பாஜக மீண்டும் காலடி வைப்பதன் மூலம் எதிர்ப்பாளர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறதாம் பாஜக.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications