ஓபிஎஸை ஓரங்கட்டுகிறதா பாஜக?
உள்ளாட்சி தேர்தலில் பாஜக சொந்த பலத்தில் களம் காணும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை: உள்ளாட்சி தேர்தலில் பாஜக சொந்த பலத்தில் களம் காணும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதேபோல் யாருடைய கூட்டணியையும் எதிர்ப்பார்த்து பாஜக இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவித்தப் பின் அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் பாஜக தலைவர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பிரிந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மோடியை சந்தித்த ஓபிஎஸ்
அண்மையில் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது குடியரசு தலைவர் தேர்தலில் ஓபிஎஸ் அணி பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியாயின.

ஓபிஎஸின் டிவிட்
நேற்று ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த பிறகு பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன்மூலம் ஓபிஎஸை பாஜகதான் பின்னிருந்து இயக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது என கூறப்பட்டது.

சொந்த பலத்தில் களம் காணும்
இந்நிலையில் மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உள்ளாட்சி தேர்தலில் பாஜக சொந்த பலத்தில் களம் காணும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததார்.

யாருடைய கூட்டணியையும்..
இதனிடையே திருப்பூரில் செய்தியாளர்களிடத் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைப்பது குறித்து தற்போது பேசவில்லை என்றார். தமிழகத்தில் பாஜக யாருடைய கூட்டணியும் எதிர்ப்பார்த்து இல்லை என்றும் அவர் கூறினார்.

ஓபிஎஸை ஓரம் கட்டுகிறதா?
பாஜக தனது பலத்தை நிரூபிக்கவே முயற்சி செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவித்தப் பின் அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் பாஜக தலைவர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது பாஜக ஓபிஎஸ் அணியை ஓரம் கட்டுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications