பாஜக வெற்றியை இனிப்பு கொடுத்து கொண்டாடிய தமிழிசை- தமிழகத்திலும் ஜெயிப்போம் என்கிறார்
குஜராத், இமாசல பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை தமிழக பாஜக தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி முகத்தில் இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். வடக்கே போல தமிழகத்திலும் வெற்றி பெறுவோம் என்று தமிழிசை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைமையகமான கமலாயகத்தில் இனிப்புகளை வழங்கி தமிழிசை சவுந்திரராஜன் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன், எதிர்ப்பு விமர்சனங்களை முறியடித்துவிட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் பாஜக தோல்வியடையும் என்ற எண்ணம் தோற்றுப்போய்விட்டது என்று கூறினார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாமல் அறிவித்த போதே பாஜக தோல்வியடைந்து விட்டதாக கூறினார்கள். ஆனால் அதையும் தாண்டி பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஜிஎஸ்டி வரி என்பது வரி குறைப்பு என்பதை மக்கள் உணர்ந்துள்ளது. எனவேதான் மீண்டும் 2 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷாவின் கடினமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது என்று கூறிய தமிழிசை ஜாதி அரசியல் செய்ய நினைத்தவர்களை மக்கள் புறந்தள்ளி விட்டனர் என்றார்.
பிரதமரை கீழ்தரமாக விமர்சித்தனர். ஜாதியை வைத்து பிரிதாளும் அரசியல் செய்தனர். அந்த ஜாதியினரே அவர்களை புறந்தள்ளி விட்டனர்.
இமாசல பிரதேசம் தொடங்கி 19 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்திலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் தமிழிசை சவுந்தராஜன் கூறினார்.
தலைநகர் டெல்லியிலும், போபாலில் உள்ள பாஜக அலுவலகம் முன் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications