'பிள்ளையார்பட்டி'யாக மாறிய கொசப்பேட்டை.. எங்கு பார்த்தாலும் கணேசா..!
சென்னை: விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது. சென்னையின் கொசப்பேட்டை பிள்ளையார்பட்டியாக மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் விநாயகர் சிலைகள்தான். கொசப்பேட்டையில்தான் பெரும்பாலான பிள்ளையார் சிலைகள் தயாரிக்கப்படுவது வழக்கம். இந்த முறையும் சிலைகள் தயாரிப்பில் கொசப்பேட்டை படு பிசியாக இயங்கி வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பே இங்கு சிலைகள் தயாரிப்புப் பணி விறுவிறுப்படைந்து விட்டது. வருடா வருடம் இங்கு விதம் விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பல பகுதிகளுக்கும் அனுப்பப்படும். இந்த முறையும் விதம் விதமான விநாயகர்களை கொசப்பேட்டையில் தயாரித்து குவித்து வருகிறார்கள்.
குட்டியூண்டு விநாயகர் சிலை முதல் 10 அடி வரையிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் கண்ணைப் பறிக்க ஆரம்பித்துள்ளன. கிடைக்கிற சந்து பொந்தெல்லாம் சிலைகள் மயமாகவே உள்ளது. வீடுகளுக்கு வெளியிலும், உள்ளும் கூட மக்கள் சிலை தயாரிப்பில் மும்முரமாக உள்ளனர்.

குயவர் பேட்ட டூ கொசப்பேட்டை
மட்பாண்டம் செய்யும் குயவர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால்தான் இதற்கு குயவர் பேட்டை என்று பெயர் வந்தது. ஆனால் பின்னர் இது கொசப்பேட்டையாக மாறிப் போனது. இங்கு பாரம்பரியாக பல குடும்பத்தினர் மட்பாண்டம், விநாயகர் சிலைகள் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

ஆளுக்கு குறைந்தது 500 சிலை
இங்கு சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் குடும்பத்தினர் வருடத்திற்குத் தலா குறைந்தது 500 சிலைகளையாவது தயாரித்து விடுவார்கள். இந்தப் பகுதியில் சிலைகள் செய்யும் குடும்பத்தினரை அணுகினால் ஆச்சரியப்படுவீர்கள். காரணம், வீட்டுக்குள் எங்கு பார்த்தாலும் பிள்ளையார் சிலைகளாகவே இருக்கும்.

வழி விடுப்பா கணேசா...
வீட்டு ஹால், படுக்கை அறை, டிவி, பிரிட்ஜ் என்று எங்கு பார்த்தாலும் செய்து வைத்த சிலைகள் நிரம்பி வழிவதைப் பார்க்கலாம்.

படுக்கையிலும் கூட சிலைகள்தான்
மேலும் வீட்டின் படுக்கை, கட்டில், சேர்களிலும் கூட சிலைகள் நீக்கமற நிறைந்திருப்பதைக் காணலாம்.

அரை அடி சிலை 50 ரூபாய்
அரை அடி உயரம் உள்ள சிறிய சிலை ரூ. 50 வரைக்கும் விற்கப்படுகிறது. பின்னர் அடி கூடக் கூட விலையும் கூடும். களிமண்ணில் செய்யும் சிலைகளை ஒரு உயரத்திற்கு மேல் செய்ய முடியாது என்பதால் களிமண்ணில் பிரமாண்ட சிலைகளைச் செய்வதில்லையாம்.

20 வருடமாக இதே தொழில்தான்
இங்கு ஒரு குடும்பத்தினர் கடந்த 20 வருடமாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பலரும் இப்படித்தான் பல வருடமாக சிலை தயாரித்து வருகின்றனர்.

களிமண் விலை ஏறிப் போச்சு
இப்போது களிமண்ணுக்கு கிராக்கியாம். மண் விலையும் ஏறிப் போயுள்ளதாம். கடந்த ஆண்டு ரூ. 1500க்கு விற்ற களிமண் இப்போது ரூ. 5000 வரை உயர்ந்து விட்டதாம்.

பெருசுகளுக்கு ஆந்திரா
பெரிய பெரிய சிலைகளை இங்குள்ளவர்கள் செய்வதில்லையாம். மாறாக ஆந்திராவிலிருந்து வரவழைக்கிறார்களாம்.

300 குடும்பங்கள்
கொசப்பேட்டையில் 300 குடும்பங்கள் சிலை தயாரிப்பில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் வேறு வேலைகளுக்கும் போக ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஸ்பெஷல் ஐட்டம்
இந்த ஆண்டு கிருஷ்ண கணேசா என்ற ஸ்பெஷல் பிள்ளையாரை செய்துள்ளநராம். இது நிற்கும் நிலையில் உள்ளது.

கருப்பு கணேசா
அதேபோல கருப்பு கணேசா என்று பெயரிடப்பட்ட கருமை நிற கணேசர் சிலையும் பிரபலமாக உள்ளதாம்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications