"உழைப்பு உழைப்பு உழைப்பு அதுதான் ஸ்டாலின்" என நினைவிடத்தில் "எழுதி கையெழுத்திட்ட" கருணாநிதி
Recommended Video

சென்னை: கருணாநிதியின் நினைவிடத்தில் பிரம்மாண்ட மூக்குக் கண்ணாடியும், பேனாவும் வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றைய நாள் முதல் அவரது சமாதிக்கு திமுகவினரும் , பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் பெரிதும் விரும்பும் முரசொலி நாளிதழ் அவர் இறந்தபோதும் கண்ணாடி பெட்டியில் தலைமாட்டில் வைக்கப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட போதும் தினந்தோறும் முரசொலி நாளிதழ் சமாதியில் வைக்கப்படுகிறது.
கருணாநிதியையும் பேனாவையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதுபோல் கருப்பு கண்ணாடியும் முக்கியமானதாகும். இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக கருணாநிதியின் சமாதியில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து பிரம்மாண்டமான கருப்பு மூக்கு கண்ணாடியும் பெரிய பேனாவும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பேப்பரில் கருணாநிதியே எழுதியது போல் உழைப்பு உழைப்பு உழைப்பு அதுதான் ஸ்டாலின் என்று எழுதப்பட்டு "மு.க" என கையெழுத்திட்டிருந்தது.
இலக்கியம், எழுத்து, வசனம் ஆகியவற்றுக்கு கருணாநிதி எத்தகைய பங்களித்திருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications