மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடத்தை சுற்றியுள்ள நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டது புளுகிராஸ்
மவுலிவாக்கத்தில் இடிக்கப்பட உள்ள 11 அடுக்குமாடி கட்டடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 3 நாய்கள் மற்றும் 11 நாய்க்குட்டிகளை புளு கிராஸ் அமைப்பினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படவுள்ளதால், அந்த பகுதியைச் சுற்றி இருந்த 3 நாய்கள் மற்றும் 11 நாய்க்குட்டிகளை புளு கிராஸ் அமைப்பினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டடம் நாளை இடிக்கப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகங்கள், ஆம்புலன்ஸ் வண்டிகள் அங்கு நிறுத்தப்படவுள்ளன. அதேபோல், அருகிலிருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த பணிகள் நடைபெறும் போது அங்கு வாழும் விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் சிகிச்சை அளிக்கவும் புளு கிராஸ் அமைப்பினர் மவுலிவாக்கத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும், புளுகிராஸ் பொது மேலாளர் ஜான் வில்லியம் தலைமையிலான குழுவினர். அந்த பகுதியைச் சுற்றி இருந்த 3 நாய்கள் மற்றும் 11 நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
நாளை கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கி முடியும் வரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக அந்த அமைப்பின் பொது மேலாளர் ஜான் வில்லியம் தெரிவித்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications