நடுக்கடலில் கம்ப்ரசர் வெடித்து 2 மீனவர்கள் படுகாயம்- படகு கடலில் மூழ்கியது.
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் கம்ப்ரசர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்தனர். இதில் அந்த நாட்டுப் படகு கடலில் மூழ்கியது.
தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மைதீன் இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க 8 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் சென்ற நாட்டுப்படகில் ஏர் கம்ப்ரசர் மூலம் சங்கு குளிக்க சென்றனர். இவர்கள் சென்ற நாட்டுப்படகு தூத்துக்குடி சங்குகுளி துறைமுகத்தில் இருந்து 5 கடல்மைல் தொலைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஏர் கம்ப்ரசர் வெடித்ததில் நாட்டுப்படகு கடலில் மூழ்கியது. இதில் தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் மற்றும் ராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் 8 பேரையும் அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அவர்களை மீட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜா மற்றும் முருகன் ஆகியோரை தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications