காதலுக்கு எதிர்ப்பு... திருப்பரங்குன்றத்தில் ரயில்முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
சென்னை: காதலுக்கு வீட்டில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்பரங்குன்றம் அருகே ரயிலில் பாய்ந்து இளம் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மூலக்கரை சுரங்கப்பாதை அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் உடல் சிதறிக் கிடந்தது. இதுகுறித்து அவ்வழியே சென்ற ரயில் ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் வந்தனர். அங்கு தலை இல்லாத நிலையில் இரு உடல்கள் கிடந்தன.

தலைப் பகுதியை தேடியபோது அது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மூட்டாகாலனி அருகே இரு உடல்களின் தலைகளும் கிடந்துள்ளன. இரு உடல்களையும் மீட்டு போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை புதூரை அடுத்த ஆத்திகுளம் யமுனா தெருவைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மகன் கார்த்திக். மதுரை கள்ளந்திரியை அடுத்த ஆமந்தூர்பட்டியைச் சேர்ந்த அழகு மகள் புனிதா என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் சுந்தர்ராஜன்பட்டியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் கணினி பிரிவில் பணிபுரிந்தார்களாம். இருவரும் காதலித்த வந்த நிலையில் இருவீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த காதலர்கள் செவ்வாய்கிழமை இருவரும் திருப்பரங்குன்றத்தில் அதிகாலையில் அவ்வழியே சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications