பெசண்ட் நகர் மின்மயானத்தில் சோ ராமசாமியின் உடல் தகனம்... வைகோ, இல.கணேசன் இறுதி அஞ்சலி
துக்ளக் பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை: உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை அப்போலோ மருத்துவமனையில் காலமான துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமியின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ராஜ்ய சபா எம்பி இல.கணேசன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சோவின் உயிர் பிரிந்தது.

இதனையடுத்து, அவரது உடல் எம்ஆர்சி நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், திரைத் துறையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் அவருடை இறுதி ஊர்வலம் எம்ஆர்சி நகரில் இருந்து புறப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராஜ்ய சபா எம்பி இல கணேசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதே போன்று நடிகர்கள் நாசர், விஷால், பொன் வண்ணன், கார்த்தி, ஒய். ஜி. மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் கலந்து கொண்டனர். சோவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர், பெசண்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பின்னர், மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications