விருத்தாசலத்தில் அரசு பள்ளி அருகே குண்டுவெடிப்பு: மக்கள் பீதி
கடலூர்: விருத்தாசலத்தில் அரசு பள்ளி அருகே குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருக்கும் திருவள்ளுவர் நகர் 10வது குறுக்கு தெருவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதற்கு அருகில் அதே பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஆதிவராகவனுக்கு சொந்தமான வெற்றிடத்தில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள குப்பையை இன்று காலை 6.45 மணிக்கு பன்றி ஒன்று கிளறியபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் பன்றி உடல் சிதறி இறந்தது. வெடிபொருள் வெடித்த சத்தம் சுமார் 1 கிமீ தூரம் வரை கேட்டது. சத்தம் கேட்டு மக்கள் அந்த இடத்தில் கூடிவிட்டனர். அப்போது குப்பை மேட்டில் இருந்து புகை வந்ததை பார்த்த மக்கள் உடனடியாக இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். யாராவது குப்பை மேட்டில் வெடிகுண்டை பதுக்கி வைத்திருக்கலாம் அதை பன்றி கிளறியபோது வெடித்துள்ளது என்று கருதப்படுகிறது. அந்த இடத்தில் மேலும் ஏதாவது குண்டுகள் உள்ளதா என்பதை கண்டறிய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
வெடிபொருள் வெடித்தபோது அந்த வழியாக யாரும் செல்லவில்லை என்பதாலும், பள்ளி திறக்கும் நேரம் இல்லை என்பதாலும் உயிர் சேதம் எதுவும் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications