போஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் மீது ஒரு மாதம் கழித்து வழக்கு
மதுரை: மதுரை வடக்கு சட்டசபை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. போஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் மீது தற்போது தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினராக இருப்பவர் போஸ். கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி அன்று மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் பெத்துராஜுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் போலீஸ் பக்ருதீன் தம்பிமார்கள், நெல்பேட்டை, மதுரை என்ற முகவரியிட்டு, அதிமுக எம்.எல்.ஏ. போஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக போஸ் வீடு உள்ள ஜீவா நகர் 2வது தெருவில் அவரது வீட்டிற்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் இந்த மிரட்டல் குறித்து போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சட்ட நிபுணரின் ஆலோசனையை கேட்டனர். இதனையடுத்து போஸ் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications