எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல்.. கடலூர் ஆசாமிக்கு வலை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மதியம் தொடர்பு கொண்ட ஒரு நபர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்க உள்ளதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். போன் மிரட்டலை அடுத்து வெடிகுண்டு பிரிவு அதிகாரிகள், முதல்வரின் தனிப்பட்ட பாதுகாப்பு போலீஸாரின் முதல்வரின் வீட்டில் சோதனையிட்டனர். கடைசியில் அது புரளி என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று மாலையில், மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு, அதே எண்ணிலிருந்து அழைத்த மர்ம நபர், நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு வைக்கப் போவதாகக் கூறி, இணைப்பு துண்டித்து விட்டார்.
ஒரே எண்ணில் இருந்து இந்த அழைப்புகள் வந்ததால், அது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த தொலைபேசி அழைப்புகள் கடலூரிலிருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த அந்த நபரை தேடி வருகின்றனர்.
-
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே?












Click it and Unblock the Notifications