மதுரை அண்ணாநகரில் பள்ளி - கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
மதுரை: மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை போலீசாருக்கு செல்போனில் பேசிய மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அண்ணாநகரில் உள்ள பெண்கள் கல்லூரி மகாத்மாகாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, புஸ்கோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி ஆகியவற்றுடன் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையால் கல்லூரி-பள்ளிகளில் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடந்தது. சுமார் 2 மணி நேர சோதனைக்கு பின்னர் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து கல்லூரிக்குள் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
அண்ணாநகர் தனியார் பள்ளியில் வெடிகுண்டு சோதனையை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவிகளை பெற்றோர் அழைத்து சென்றனர். மற்ற 3 பள்ளிகளிலும் சோதனைக்கு பின்னர் புரளி என்று தெரியவந்ததால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications