நெல்லை பெருமாள் கோயிலில் குண்டு வெடிக்கும்: மர்மநபர் மிரட்டலால் பரபரப்பு !
நெல்லை: நெல்லையில் உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் குண்டுவெடிக்கும் என்று அடையளாம் தெரியாத நபர் விடுத்து தொலைபேசி மிரட்டலால் பரபரப்பு நிலவியது.
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவல கட்டுப்பாட்டு அறைக்கு, ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் தொலைபேசியில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் பேசிய மர்ம நபர் ஒருவர், நெல்லையில் உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் போலீசார் மோப்ப நாயுடன் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையின்போது பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 10க்கும் மேற்பட்ட கோயில்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் நெல்லையில் உள்ள அனைத்து கோயில்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டு வெடித்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நெல்லையில் பெருமாள் கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் அடிக்கடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர்கள் மிரட்டல் விடுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.












Click it and Unblock the Notifications