சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 50 பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்.. வதந்தியாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னையில் சைதாப் பேட்டை, அடையாறு, மயிலாப்பூர் பள்ளிகளூக்கு மிரட்டல் வந்ததை அடுத்து பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் கிழக்கு கடற்கரைச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர். உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வீண் வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மர்ம தொலைபேசி மிரட்டல்
சென்னை சாந்தோமில் உள்ளது ரபெய்ல்ஸ் மேல்நிலைப்பள்ளி. மாணவிகள் மட்டுமே பயிலும் இந்தப்பள்ளியின் முதல்வருக்கு காலை 11 மணியளவில் மர்ம தொலைபேசி ஒன்று வந்துள்ளது. அதில் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அந்த மர்ம குரல் கூறியுள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு உடனடியாக பள்ளி முதல்வர் தொலைபேசி மூலம் தகவல் அளித்தார்.
வெடிகுண்டு நிபுணர்கள்
வெடிகுண்டு நிபுணர்களுடன் மோப்ப நாய்களுடன் போலீசார் பள்ளி வளாகத்திற்குள் வரவே அந்த பகுதியில் பதற்றம் உருவானது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் அலறியடித்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்தனர். உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படவே மாணவிகள் அனைவரும் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டனர். பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் சென்னையில் பள்ளிகள்
இதேபோல தென்சென்னை பகுதியில் உள்ள அடையாறு, திருவான்மியூர்,ஈஞ்சம்பாக்கம், மந்தைவெளி மற்றும் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் வாட்ஸ் அப்பிலும் பரவிய நிலையில், பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்பியது.
போலீசார் குவிப்பு
இதனையடுத்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் வந்து அழைத்துச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் தகவல் பரவியதால் பள்ளிக்குழந்தைகளும், பெற்றோர்களும் பீதியடைந்தனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து அடையாறு திருவான்மியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
50 பள்ளிகளுக்கு விடுமுறை
இதேபோல இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஒரேநாளில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலால் கிழக்கு கடற்கரைச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
காவல்துறை விளக்கம்
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் பற்றிய வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னையில் எந்த பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்படவில்லை என்று கூறியுள்ள காவல்துறை ஆணையர், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், வீண் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications