ரஜினிதான் காரணமோ.. தேடி தேடி பெரியார் புத்தகங்களை வாங்கிய இளைஞர்கள்.. கண்காட்சியில் செம மவுசு!
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சையாக கருத்து தெரிவித்து இருந்த நிலையில் பெரியார் குறித்த புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் அதிகமாக விற்று தீர்ந்து இருக்கிறது.
சென்னை: பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சையாக கருத்து தெரிவித்து இருந்த நிலையில் பெரியார் குறித்த புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் அதிகமாக விற்று தீர்ந்து இருக்கிறது.
பெரியார் குறித்து துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகி உள்ளது. ரஜினியின் கருத்துக்கு எதிராக திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து போராடி வருகிறது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினி காந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார்.

என்ன புத்தகம்
இந்த நிலையில் ரஜினி பெரியார் குறித்து பேசிய நிலையில், பெரியார் பற்றி பலர் தேடி தேடி புத்தகங்களை வாங்கி இருக்கிறார்கள். நடந்து முடிந்த சென்னை பபாசி புத்தக கண்காட்சியில் முன்பை விட அதிக அளவில் புத்தகங்கள் பெரியார் தொடர்பாக விற்றுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் பெரியார் புத்தகங்கள் அதிகம் விற்றுள்ளதாக பதிப்பகங்கள் தெரிவித்துள்ளது. பலர் ஆர்வமாக பெரியார் குறித்த புத்தகங்களை தேடி தேடி வாங்கி இருக்கிறார்கள்.

மிக முக்கியம்
முக்கியமாக இளைஞர்கள்தான் அதிகமாக பெரியார் குறித்து புத்தகங்களை வாங்கி உள்ளனர். 20-30 வயதுக்கு இடையில் உள்ள வயதை சேர்ந்தவர்கள் பெரியார் குறித்தும் அதிகம் புத்தகங்களை வாங்கி உள்ளனர். முக்கியமாக பெண் ஏன் அடிமையானாள், பெரியார் கருத்துக்கள், பெரியார் சிந்தனைகள், பெரியார் களஞ்சியம் குடி அரசு, பெரியார் - அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு, ,மனு நீதி : ஜாதிக்கொரு நீதி உள்ளிட்ட புத்தகங்கள் அதிகம் விற்றுள்ளது.

அதிகம் விற்றது
அதேபோல் பெரியார் தொடர்பாக கருஞ்சட்டை பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களும் அதிகம் விற்றுள்ளது. சென்ற வருடம் 2000 புத்தகம் விற்ற பெரியார் தொடர்பான புத்தகங்கள் இந்த வருடம் 3500 வரை விற்றுள்ளது. பெரியார் என்ன பேசி இருக்கிறார். அவரின் கருத்துக்கள் என்ன. எப்படி அவர் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவர் ஆகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் புத்தகம் வாங்கியுள்ளனர்.

ரஜினி எப்படி
முக்கியமாக நடிகர் ரஜினியின் துக்ளக் விழாவிற்கு பின்தான் இந்த விற்பனை அதிகம் ஆகியுள்ளது. கடந்த வாரம் செவ்வாய் கிழமை ரஜினி பெரியார் குறித்து பேசினார். அப்போது சூடுபிடிக்க தொடங்கிய வியாபாரம் தொடர்ந்து இறுதி நாள் வரை நடந்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் பெரியார் குறித்து விழிப்புணர்வை ரஜினி ஏற்படுத்திவிட்டார், அதனால் அவருக்கு நன்றி என்று திக, திவிக தொண்டர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications