கோவை: மது போதையில் பெண் போலீசை தாக்கிய ”குடிமகன்” கைது
கோவை: குடிபோதையில் பெண் காவலரைத் தாக்கியதாக கோவையில் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கோவை மேற்கு போக்குவரத்து காவல்நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வரும் சத்யா (36), நேற்று ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மது போதையில் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி தவறான வழியில் செல்லும் படி ரகளை செய்திருக்கிறார் ஒருவர். ஆனால், அதனை மதியாமல் தாண்டிச் செல்ல முயன்ற ஆட்டோ ஒன்றை வழி மறித்த அந்நபர், அந்த ஆட்டோவின் கண்ணாடியை உடைக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட சத்யா விரைந்து சென்று அதனை தடுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால், மது போதையில் இருந்த அந்நபர் சத்யாவைத் கீழே பிடித்து தள்ளி அவரை தாக்கியுள்ளார். உடனடியாக இதுகுறித்து உக்கடம் போலீஸாருக்கு சத்யா தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட நபரைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தடாகம் சாலையைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் வீரபாண்டி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், வீரபாண்டி மீது, கொலை மிரட்டல், அரசு ஊழியரை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பெண் போலிஸ் சத்யா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications