நடிகர் ரஜினிகாந்தின் கொள்கை பாஜகவுடன் ஒத்துப் போகிறது : தமிழிசை செளந்தரராஜன்
பாஜகவின் கொள்கையோடு நடிகர் ரஜினிகாந்தின் கொள்கை ஒத்துப்போகிறது என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.
Recommended Video

சென்னை : நடிகர் ரஜினியின் கொள்கை பாரதிய ஜனதாவின் கொள்கையோடு ஒத்துப்போகிறது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பாஜகவும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது குருமூர்த்தி அவர்களின் கருத்து. ஒரு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்ற வகையில் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார் என்று பதிலளித்தார்.
மேலும், எங்களை பொறுத்தவரை இரண்டு திராவிட கழகங்களும் இல்லாத ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவேதான் இரு கழகங்களும் இல்லாமல் தேர்தலைச் சந்தித்து வருகிறோம். எனவே எங்கள் முன்னால் இருக்கும் சவால். கட்சியைப் பலப்படுத்துவதுதான். அதில்தான் இப்போது ஈடுபட்டுள்ளோம்.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியும், அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதும் தான் பாஜகவின் கொள்கை. ரஜினியின் கொள்கையும் எங்கள் கொள்கையோடு ஒத்துப்போகிறது. கொள்கை ஒன்றுபட்டாலும் அரசியலில் இணைந்து செயல்படுவது வேறு.
அவர் இப்போதுதான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து இருக்கிறார். இனி கட்சி தொடங்கி அவரது செயல்பாட்டையும் பலத்தையும் நிரூபிக்க வேண்டும். அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் எனவே கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications