நானும் அண்ணன் வைகோவும் சிங்கங்கள்... விஜயகாந்த்
மதுரை: பாஜக அணியின் நானும் அண்ணன் வைகோவும் இரண்டு சிங்கங்களாக இணைந்துள்ளோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக தலைவர் வைகோவை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருமங்கலத்தில் நேற்று பிரசாரம் செய்தார், அப்போது அவர் பேசியதாவது
நானும், வைகோவும் ஜாதி, மதத்துக்கு அப்பாற்றப்பட்டவர்கள். பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மோடி பிரதமராவார். அவர் பிரதமர் ஆக விருதுநகர் தொகுதியில் அண்ணன் வைகோ வெற்றி பெற வேண்டும்.
இவர் ஏற்கனவே தொகுதிக்கு அதிகம் செய்துள்ளார். முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டுள்ளார். உங்களுக்காக நிச்சயம் பேசுவார்.

உத்தரவாதம் இல்லை
தற்போது மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, இதனால் விவசாயமும் இல்லை. இது சம்பந்தமாக முதல்வர் ஜெயலலிதா உத்தரவாதம் எதுவும் தரமாட்டார்.

சொத்துக்குவித்த ஜெ
அவர் முதல்முதலாக ஆட்சிக்கு வந்தபோது சொத்து மதிப்பு 2 கோடிதான். ஆனால் அவருக்கு 64 கோடி சொத்து உள்ளது. ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறிய அவரிடம் கோடிக்கணக்கான சொத்துகள் எப்படி?

டாஸ்மாக்தான் சாதனை
அதிமுக ஆட்சியில் ஒரே சாதனை டாஸ்மாக். எதற்கு எடுத்தாலும் அம்மா பெயர் வைக்கும் ஜெயலலிதா டாஸ்மாக் கடைக்கு அம்மா டாஸ்மாக் என்று ஏன் பெயர்வைக்கவில்லை.

இரண்டு சிங்கங்கள்
நான் ஒரு சிங்கம், அண்ணன் வைகோ ஒரு சிங்கம். இரண்டு சிங்கங்கள் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்றார் விஜயகாந்த்.

கோபப்பட்ட விஜயகாந்த்
பிரசாரத்தில் ஏராளமான தொண்டர்கள் விசிலடித்தனர். அவர்களை வைகோ அடக்கினார். அப்படியும் விசில் சத்தம் வரவே விஜயகாந்த் தன்னுடைய கூலிங்கிளாஸ் கண்ணாடியை கழற்றிவிட்டு ஒரு பார்வை பார்த்த உடனே விசில் சத்தம் சட்டென்று அடங்கியது.

சிரிச்சிக்கிட்டே பேசுறேன்
அதேபோல பிரசாரத்தில் பேசும் போது வைகோவிற்கு முதலில் பேச வழிவிட்டு பின்னர் விஜயகாந்த் பேசினார். நான் கோபத்தோட பேசுறேன்னு எல்லோரும் சொல்றாங்க. இனி சிரிச்சிக்கிட்டே பேசப்போறேன். இந்த சிரிப்பு போதுமா? என்று கேட்டு சிரித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications