திண்டுக்கல்: ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த சிறுவன் மாடு முட்டி பலி!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை காளை முட்டிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், தவசிமடையில் கோயில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் அடக்க முயற்சி செய்தனர். இதில் 18க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதில், ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வாடிவாசலில் இருந்து ஒரு காளையை திறந்து விட்டதும், சீறிக்கொண்டு பார்வையாளர்கள் பகுதியை நோக்கிப் பாய்ந்தது. போட்டியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களை முட்டித்தள்ளியது. இதில் சிவக்குமார் என்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவனின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications