காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதால் போன உயிர்கள் மீளாது தான், ஆனால்...: சரத்குமார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க கூடாது என்றும், தொடர்ந்து இந்தியாவின் சார்பில் எந்தவித பிரதிநிதித்துவமும் இடம் பெற கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதனை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுபூர்வமான, ஒருமித்த குரலாக வரலாற்று சிறப்புமிக்கதாக இந்த தீர்மானம் திகழ்கிறது.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காமல் இருப்பதால் இனப்படுகொலையில் மாண்டுபோன லட்சக்கணக்கான தமிழர்கள் உயிர் மீண்டு வரப்போவது இல்லை தான். ஆனால் கொந்தளித்து குமுறிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாகவும், தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகவும் இம்மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாமல் இருப்பதுதான். தமிழ் நெஞ்சங்களுக்கு குறைந்தபட்சம் ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிட்டால், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்ற இலங்கையின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து விட கூடாது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு களங்கம் ஏற்படாமல் காக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications