கிரிக்கெட்டை புறக்கணிப்பதற்கு பதில் டாஸ்மாக்கை புறக்கணித்தால் அரசு ஆடிப்போயிடும்.. எஸ்வி சேகர் அடடே!

கிரிக்கெட்டை புறக்கணிப்பதற்கு பதில் டாஸ்மாக்கை புறக்கணித்தால் அரசு ஆடிப்போய்விடும் என எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட்டை புறக்கணிப்பதற்கு பதில் டாஸ்மாக்கை புறக்கணித்தால் அரசு ஆடிப்போய்விடும் என எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடும் எதிர்ப்பையும் மீறி இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நடை பெறுகிறது.

எஸ்வி சேகர் டிவிட்

எஸ்வி சேகர் டிவிட்

பலத்த பாதுகாப்புக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் ஐபிஎல் கிரிக்கெட் எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தண்ணியடிக்க மாட்டோம்

தண்ணியடிக்க மாட்டோம்

அதாவது, தண்ணீருக்காக கிரிக்கெட்டை புறக்கணிக்கிறது பலன் தராது.. அதற்கு பதில் காவேரி தண்ணீர் கிடைக்கும் வரை டாஸ்மாக் தண்ணியடிக்க மாட்டோம் என்று ஸ்ட்ரைக் பண்ணலாம் என தெரிவித்துள்ளார்.

கவர்மெண்ட் ஆடிபோயிடும்

டாஸ்மாக்கை புறக்கணித்து ஸ்ட்ரைக் செய்தால் கண்டிப்பா கவர்மெண்ட் ஆடிபோய்விடும் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்தார். அதேநேரத்தில் தண்ணியை நிறுத்தியவர்களின் கை காலும் தானே ஆட ஆரம்பிக்கும் என்றும் எஸ்வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார்.

கிண்டல்

கிண்டல்

காவிரிக்காக தமிழ் அமைப்புகள் உயிரைக் கொடுத்து போராடி வரும் நிலையில் பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் அதனை கிண்டலடிக்கும் வகையில் டிவிட்டியிருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+