எடப்பாடியில் ஒரு அதிசயப் பிறவி.. பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிய டிரைவர் கைது!
எடப்பாடி: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 37 வயது லாரி டிரைவர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறி வைத்து கடந்த 2 வருடங்களாக திருடி வந்துள்ளார். அந்த நபரை தற்போதும் கையும் களவுமாக போலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னிவாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இந்த லாரி டிரைவர். பெயர் சசிக்குமார். திருமணமாகி, 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு வித்தியாசாமான பழக்கம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொற்றிக் கொண்டது. அதாவது அக்கம் பக்கத்து வீடுகளின் மாடியில், கொள்ளைப் புறத்தில், வீட்டுக்கு வெளியே பெண்கள் காயப்போடும் அவர்களது உள்ளாடைகளை மட்டும் இவர் திருடி வந்துள்ளார்.
வீடுகளில் தாங்கள் காயப் போடும் பிரா, நைட்டி, பேன்டீஸ் ஆகியவை காணாமல் போனதால் பெண்களுக்குப் பெரும் குழப்பமானது. அக்கம் பக்கத்துப் பெண்களிடையே இது பெரும் பீதியைக் கிளப்பியது. யாரோதான் இதை குறி வைத்துத் திருடுவதாக அவர்களுக்குத் தோன்றியது.
இதையடுத்து தத்தமது வீ்ட்டு ஆண்களிடம் இதுகுறித்து அவர்கள் கூறினர். இதனால் கொந்தளித்த ஆண்கள், அந்த நூதனத் திருடனைப் பிடிக்க ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். அத்தனை வீடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தியாகராஜன் என்பவரது வீட்டு வெளிக் கொடியில் காயப்போட்டிருந்த உள்ளாடையை சசிக்குமார் திருடியபோது, அதை தியாகராஜன் பார்த்து விட்டார்.
உடனடியாக அவரை மடக்கிப் பிடித்தார். அக்கம்பக்கத்தினர் குவிந்தனர். சசிக்குமாரிடம் விசாரித்தபோதுதான் அவர் தான் திருடியதை ஒத்துக் கொண்டார். இதையடுத்து போலீஸில் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
பூலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications