குடித்துவிட்டு வரக்கூடாதுனு விஜய் சொல்லிட்டாரு! லைட்டா ஒரு பெக் போட்டாகூட கண்டுபிடிச்சிடுவாங்களே!
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில் யாரும் குடித்துவிட்டு மாநாட்டுக்கு வரக் கூடாது என விஜய் அறிவுறுத்தியுள்ள நிலையில் ப்ரீத் அனலைசர் கொண்டு ஒவ்வொருவரையும் சோதனை செய்து மாநாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்காக விஜய் நேற்றே விக்கிரவாண்டிக்கு சென்றுவிட்டார்.

அவர் மாநாட்டின் இறுதிக் கட்ட பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து அவர் தங்குவதற்காக விக்கிரவாண்டியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில்தான் அவர் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அவர் கேரவன் மூலம் மாநாட்டுக்கு வருவார் என சொல்லப்படுகிறது. ஒரு சிலர் அவர் நேற்று இரவு மாநாட்டு இடத்தை ஆய்வு செய்துவிட்டு கேரவனிலேயே தங்கிவிட்டார் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் தனது மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என சில வழிமுறைகளை வகுத்துள்ளார்.
அதில் பெண் போலீஸாரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். யாரும் மது அருந்திவிட்டு வரக் கூடாது., சாலையில் எந்த வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. அதிகாரிகளிடமும் மரியாதையாக நடந்துக் கொள்ள வேண்டும். கிணறு, ஆபத்தான பகுதிகளில் கவனமாக இருத்தல் வேண்டும்.
இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களை செய்யக் கூடாது. பேருந்து, வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே ஆட்களை ஏற்றிக் கொண்டு வர வேண்டும். மருத்துவக் குழு, தீயணைப்புத் துறையினருக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை எல்லாம் விதித்துள்ளனர்.
அது போல் எந்த டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாகவும் வாகனங்களை நிறுத்தவே கூடாது என்றும் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வரக் கூடாது என விஜய் சொல்லிவிட்டார், குடித்துவிட்டு போனால் என்ன, விஜய் பார்க்கவா போகிறார் என நினைத்தால் அது தவறு.
மாநாட்டு வருபவர்கள் ஒவ்வொருவரையும் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்து அவர்கள் குடிக்கவில்லை என்றால் மட்டுமே உள்ளே அனுப்பப்படுவார்களாம். அதாவது போலீஸார் வைத்திருக்கும் கருவி அது. அதில் ஒரு ஸ்ட்ரா போன்று பைப் இருக்கும். அதில் ஊத வேண்டும். அப்போது அந்த மீட்டரில் எவ்வளவு ஆல்கஹால் அவரது சுவாசத்தில் இருக்கிறது என்பதை காட்டும். இதை வைத்து அவர் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது உள்ளிட்ட கேஸ்கள் போடப்படும்.












Click it and Unblock the Notifications