லஞ்ச வழக்கு: தினகரனுக்கான சம்மனுடன் சென்னை விரையும் டெல்லி போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக சம்மனுடன் டெல்லி போலீசார் விரைவில் சென்னை வர உள்ளனர்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கே ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினகரனுக்கு உதவிய இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது சின்னத்தை கைப்பற்ற தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி தர தயாராக இருந்ததாகவும், அதில் ரூ. 10 கோடியை தன்னிடம் முன்பணமாக வழங்கியதாகவும் கூறினார்.

சுகேஷ் வைத்திருந்த ரூ. 1.3 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் லஞ்ச புகார் வழக்கு தொடர்பான சம்மனுடன் டெல்லி போலீசார் விரைவில் சென்னை வருகிறார்கள்.

தினகரனிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் கைது செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi police is soon coming to Chennai with summons for TTV Dinkaran in bribery case.
Please Wait while comments are loading...