குடிகார மாப்பிள்ளை.. தூக்கி வீசிய மணமகள்.. திருமணத்திற்கு வந்தவர் தாலி கட்டினார்!
மேட்டூர்: சேலம் மா்வட்டம் மேட்டூரில், திருமணத்திற்கு முதல் நாள் தனது நண்பர்களுடன் சேர்ந்து வயிறு முட்ட விடிய விடிய குடித்தார் புது மாப்பிள்ளை. பின்னர் மணமகள் வீட்டாருடன் சண்டை போட்டார். காலையில் எழுந்திருக்க முடியாமல் விழுந்து கிடந்தார்.. இந்த குடிகாரன் எனக்கு வேண்டாம் என்று மணமகள் அதிரடியாய் நிராகரித்தார். கடைசியில் திருமணத்திற்கு வந்திருந்த வேறு ஒரு இளைஞரைப் பார்த்து அப்பெண்ணுக்கு கட்டி வைத்து சந்தோஷமாக அனுப்பி வைத்தனர்.
குடித்துக் கேடுகெட்ட தனமாக நடந்து கொண்ட அந்த குடிகார மாப்பிள்ளை தொங்கிய முகத்துடன் விரக்தியில் குடும்பத்தாருடன் ஊரைப் பார்க்கப் போய்ச் சேர்ந்தார்.
மோகன் என்பவரின் மகள் ரேவதி. 25 வயதான இவருக்கும், விஜயரத்தினம் என்ற 27 வயது நபருக்கு திருமணம் பேசி முடிவு செய்தனர். மேட்டூரில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.
முதல் நாள் இரவே இரு வீட்டாரும் திருமண மண்டபத்திற்கு வந்து விட்டனர். அன்று இரவு மாப்பிள்ளை விஜய்ரத்னம், தநது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறி தாறுமா்றாக செயல்பட ஆரம்பித்தார். மணமகள் வீட்டாருடன் சண்டைக்குப் போனார். இதையடுத்து அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.
அடுத்த நாள் காலையில் மாப்பிள்ளையால் எழுந்திருக்க முடியவில்லை. முதல் நாளில் கழுத்து வரைக்கும் குடித்திருந்ததால் அவரால் காலையில் நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை. மயக்கமாகிக் கிடந்தார். இதனால் முகூர்த்த நேரம் தாண்டியும் மாப்பிள்ளை மணமேடைக்கு வரவில்லை. திருமணம் நின்று போனது.
இதனால் ஆவேசமடைந்த மணமகளின் தந்தை போலீஸில் புகார் செய்தார். அதே நேரத்தில் மோகனின் உறவினர்கள், திருமணத்திற்கு வந்துள்ள உறவுப் பையன் யாரையாவது பேசி உடனடியாக ரேவதிக்குத் திருமணத்தை நடத்தி விடலாமே என்று யோசித்துள்ளனர். ரேவதியும், குடிகார மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதையடுத்து அங்கேயே தேடிப் பார்த்ததில் சுகுமாரன் கிடைத்தார். இவர் உறவுக்காரர்தான். உடனடியாக அவருக்கும், ரேவதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
மணமகள் வீட்டார் சந்தோஷமாக திரும்பிச் சென்றனர். பழைய மணமகன் வீட்டாரோ அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் சென்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications