ஒய்யாரமாக மணமேடைக்கு புல்லட்டில் வந்த மணப்பெண்... ஷாக்கான உறவினர்கள்!
ஆமதாபாத்: குஜராத்தில் திருமணத்தின் போது மணமேடைக்கு புல்லட் பைக்கில் வந்து உறவினர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் மணப்பெண் ஒருவர்.
வழக்கமாக திருமணத்தின் போது தோழிகள் மற்றும் உறவினர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி அல்லது காரில் மணமகள் ஊர்வலமாக வருவது வழக்கம்.
ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, வித்தியாசமாக புல்லட் ராணியாக மணமேடைக்கு வந்து சேர்ந்துள்ளார் ஆமதாபாத்தைச் சேர்ந்த ஆயிஷா உபாத்பாய் என்ற 26 வயது பெண்.

பேராசிரியை...
கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் ஆயிஷா. சமீபத்தில் இவரது திருமணம் நடைபெற்றது. மணமகள் எப்போது வருவார் என அனைவரும் ஆவலுடன் வாயிலைப் பார்த்தபடி காத்திருந்தனார்.

ஷாக்கான உறவினர்கள்...
அப்போது மண்டபத்தின் வாசலில் திடீரென ஒரு புல்லட் பைக் வரும் சத்தம் கேட்டது. யாரது மண்டபத்திற்குள் பைக்கில் வருவது எனப் பார்த்த உறவினர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

புல்லட் ராணி...
காரணம் மணமகள் உடையில் கம்பீரமாக புல்லட்டை ஓட்டியபடி புன்னகையுடன் வந்தது ஆயிஷா தான். சினிமா பாணியில் இதற்கு தகுந்தாற்போல் பின்னணி இசையும் இசைக்கப்பட்டது.

பெற்றோரின் சம்மதம்...
ஆயிஷாவிற்கு புல்லட் ஓட்டுவது மிகவும் பிடிக்குமாம். தனது 13 வயதில் இருந்தே அவர் பைக் ஓட்டி வருகிறாராம். அதனால் தான் திருமணத்தின் போது ஒரு அலங்கார சிலையைப் போல் வராமல், புல்லட்டில் வந்து அனைவரையும் அசர வைக்க முடிவு செய்தாராம். ஆயிஷாவின் இந்த விருப்பத்திற்கு அவரது பெற்றோரும் குறுக்கே நிற்கவில்லை.

கணவரோடு ஒரு ரவுண்ட்...
இதில் என்ன காமெடி என்றால் புல்லட் ராணியாக வலம் வரும் ஆயிஷாவின் கணவருக்கு புல்லட் ஓட்டத் தெரியாதாம். இதனால், திருமண அரங்கிற்குள்ளேயே தனது கணவரையும் புல்லட்டில் அமர வைத்து வலம் வந்துள்ளார் ஆயிஷா.

வைரல்...
இப்படி, புல்லட் ஓட்டியபடி ஆயிஷா திருமணத்திற்கு வந்த போட்டோக்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஆயிஷாவை புல்லட் ராணி என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications