Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை திருமணம்! இன்று மணமகன் வீட்டு பாத்ரூமில் மணப்பெண் மர்மச் சாவு! திருத்தணியில் திக் திக்!

Subscribe to Oneindia Tamil

திருத்தணி: திருத்தணியில் நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில் மணமகன் வீட்டில் மணப்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அத்திமஞ்சேரிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் பொறியியல் பட்டதாரி. அரசு போட்டித் தேர்வுக்காக தயாராகி வந்தார்.

tirutani crime

இவருக்கு ஆந்திர மாநிலம் சிந்தாலப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பி.காம். பட்டதாரியான சந்தியா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் பல்ஜி கண்டிகையில் வெள்ளிக்கிழமை (நாளை அக்.31) காலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டது.

இந்த திருமணத்திற்காக இருவரும் ஆயிரம் கனவுகளுடன் இருந்தனர். திருமணத்திற்கு முதல் நாளான இன்று மணமகனின் சொந்த ஊரான அத்திமஞ்சேரிபேட்டையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர்களின் வழக்கப்படி ஒரு நாளைக்கு முன்னதாகவே மணமகள், அவரது குடும்பத்தினர், மணமகனின் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் மணப்பெண் சந்தியா, குளிப்பதற்காக குளியல் அறைக்குச் சென்றார்.

அப்போது அவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் மணமகள் வீட்டார் கதவை தட்டினர். சந்தியா எந்த பதிலையும் தரவில்லை. இதையடுத்து மணமகன் வீட்டாரிடம் தெரிவித்தனர். அவர்களும் வந்து கதவை நன்கு தட்டி பார்த்தனர். ஆனாலும் சந்தியா கதவை திறக்கவில்லை.

அப்போது இரு வீட்டாரும் சேர்ந்து குளியல் அறை கதவை உடைத்தனர். உள்ளே பார்த்தால் மணமகள் பேச்சு மூச்சின்றி கிடந்தார். இதனால் கல்யாண வீடே கலங்கி போனது. உடனே மணப்பெண்ணை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , சந்தியா ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து பொதட்டூர்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் உடனே வந்து உடலை மீட்டனர். அவரதசு உடல் திருத்தணி அரசு மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் எப்படி இறந்தார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார். அந்த பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பம் என்றும் இந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள அவர் எந்த பிரச்சினையும் செய்து கொள்ளவில்லை என்றும் மணமகள் வீட்டார் தெரிவித்தனர். ஒரு வேளை குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+